To Get Free Islamic SMS Join

Thursday, January 13, 2011

அழியும் சூரியன்

சூரியனின் ஒளி அதன் மேற்பரப்பில் நிகழும் ஒருவித இரசாயன் செயல் முறையினால்தான் (Chemical   Process) ஏற்படுகின்றது. இந்த இரசாயன செயல்முறை கடந்த 500 கோடி வருடங்களாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த இரசாயன செயல் முறை முடிவுக்கு வந்துவிடும். அப்பொழுது சூரியன் தன் ஒளியை முழுமையாக இழந்து அணைந்து விடும். இதனால் புவியில் உயிரினங்கள் யாவும் அழிவை சந்திக்கும். சூரியன் வாழ்வு நிரந்தரமானது அல்ல என்பதை பின் வரும் வசனம் கூறுகிறது.

وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையறைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவற்றையும் மிகைத்தோனும், நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். 36:38 سورة يس
 
இங்கு கையாளப்பட்டுள்ள 'முஸ்தகர்' என்ற சொல்லுக்கு பொருள் தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஓர் இடத்தை அல்லது காலத்தைக் குறிப்பதாகும். எனவே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்து செல்லும் சூரியனானது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் சென்றிடும். அதன் பின்னர் அது ஒரு முடிவுக்கு வந்து விடும் அல்லது அணைந்துவிடும்.

இக்கருத்தினை இன்னும் தெளிவாக எடுத்துரைக்கும் வசனங்கள். 13:2, 35:13, 39:5 
 
 

No comments:

Post a Comment