To Get Free Islamic SMS Join

Monday, January 17, 2011

செவி,பார்வைப் புலன்கள்

வளர்ந்து வரும் கருவில் முதலில் உருவாவது செவிப்புலனேயாகும். 24வது வாரத்திற்கு பின்னர் கருக்குழந்தை (Foetus) ஒலிகளை கேட்கத் தொடங்குகிறது. இதனைப் பின் தொடர்ந்து பார்வைப்புலனும் 28வது வாரத்த்தில் கண்ணின் விழித்திரை (Retina) வெளிச்சத்தை உணரும் தன்மையையும் பெறுகின்றது. கருவில் உருவாகும் இப்புலணர்வை இறைமறை இப்படி எடுத்துறைக்கிறது.

وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ

இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்: (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும். 32:9

إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا
(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக; அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அத்தஹர் 76:2
இந்த வசனங்களிலிருந்து பார்வைப் புலனுக்கு முன்பு செவிப்புலனை குறிப்பிடுவதை பார்க்கலாம். எனவே நவீன கருவியல் கண்டுபிடிப்புகள் குர்ஆன் வர்ணனைகள் பொருந்திப் போவதை காணலாம்.

No comments:

Post a Comment