وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். 51:49
இந்த இறைவசனம் மனிதர்கள், மிருகங்கள் செடிகொடிகள் பழவகைகள் என்ற இனங்களையும் கடந்து மற்றவற்றிலும் பாலினம் இருக்கிறது என்பதை கூறுகிறது. நாம் அன்றாடம் பயன் படுத்தும் மின்சாரம் கூட Negative, Positive என அமைந்திருப்பதை காணலாம்.
سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ
பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். 36:36
இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் இணைகள் உள்ளடங்கி நிற்கின்றன என்பதை இறைமறை கூறுகின்றது. ஆனால் சில உண்மைகளை இப்பொழுது அறியாமல் இருக்கலாம். எதிர் வரும் காலங்களில் அவன் அவற்றைக் கண்டு பிடித்து உலகிற்கு அறிவிக்கக்கூடும்.
No comments:
Post a Comment